Friday, November 12, 2010

பிரியாத வரம் வேண்டும் !




பிரிவை
ஏற்கனவே
நீ
தந்துவிட்ட பின்பு

நான்
பிரியாத
வரம் கேட்டால்
கேலி செய்யும் அன்பு

தோல்வி கூட சுகம்
என்று எனக்கு
சொல்லித்தந்தது உன் காதல்

நீ தந்த
காயங்கள் எல்லாம்
கருவாகி என்னுள்
கவிதை குஞ்சுகளை
பிரசவித்துக்கொண்டிருக்கிறது..


இதுதான் தருணம் என
நீயும் விட்டு சென்றுவிட்டாய்.

இந்தா மரணம் என
இதயத்திற்கு பரிசு தந்துவிட்டாய்.


இதயத்தின் ஓரமாய் சின்னதாய் ஒரு வலி
மருத்துவம் பார்க்க தேடினேன் ஒரு வழி


இதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார்கள் !
அது உன் நினைவால் என்றேன் நான்..


இதயம் செயலிழக்கக்கூடும் என்றார்கள் !
செயல் என்பது நீ என்றேன் நான்...


இதயத்தில் ஓட்டை என்றார்கள் !
அது நீ வந்து போன வழி என்று
அவர்களுக்கு எப்படித் தெரியும் ?


இதயம் இறந்துவிடும் என்றார்கள் !
அது உனை இழந்த பின்பு
ஏற்கனவே இறந்துவிட்டது
அவர்களுக்கு எப்படித் தெரியும் ?


முதல் பார்வை; முதல் ஸ்பரிசம்; முதல் முத்தம்..
இப்படி உன் நினைவாக
எதுவுமே என்னிடம் இல்லை
நீ தந்த இந்த
முதல் பிரிவைத் தவிர...


வெட்கம் காதலாகி பயத்தில் அச்சமானது உன்னிடம் ;
கவிதை காதலாகி கண்ணீர் மிச்சமானது என்னிடம்..

நானோ உன் கனவனாய்
தினமும் கனவுகளில் வாழ்ந்துவிட்டேன்

இப்பொழுதுதான் தெரிகிறது
நீயோ இன்னும் உறங்கவே ஆரம்பிக்கவில்லை என்று

இனி என் வாழ்க்கையில்
என்னால் மறக்கவே முடியாது என நினைக்கிறேன்;

நீ கடைக்கண் பார்த்த அந்த ஓரிரு நாட்களை
நீ புன்னகை புரிந்த அந்த ஓரிரு மாதங்களை
நீ பேசிப் பழகிய அந்த ஓரிரு வருடங்களை

மறக்கத்தான் நினைக்கிறேன்
நீ என்னை உதறிச் சென்ற அந்த ஒரு நொடியை....

நீ காதலித்தது என்னை அல்ல
என் கவிதைகளைத்தான் என்பது
இப்பொழுதுதான் எனக்குத் தெரியும்

உனக்கு அடையக்கிடைப்பதும் நான் அல்ல
என் கவிதைகள் மட்டுமே என்பது
எப்பொழுதோ உனக்குத் தெரியும்

இப்படி உனக்கு என்ன தேவையோ ;
அதை நீ எடுத்துக்கொள்கிறாய்..

என்னால் என்ன தரமுடியுமோ ;
அதையும் நான் தந்துவிடுகிறேன்

இருந்தும் நீ கேட்கவிருந்து ;
நான் தரமுடியாமல் போனவை எத்தனையோ ?

என்னால் தரமுடிந்து ;
நீ கேட்காமல் போனவை எத்தனையோ ?

காதலில் !
நாம் பல கேள்விகளுக்கு பதில் தருவது இல்லை...

ஏன் என்றால் !

பதில் கிடைக்கும் என்கிற கேள்விகளை மட்டுமே நாம்
கேட்டுக்கொண்டிருக்கிறோம்...