Thursday, July 28, 2011

Muthal Muththam (First Kiss)


இயற்கையின் பரிசு வாழ்க்கை
வாழ்க்கையின் பரிசு காதல்
காதலின் பரிசு முத்தம்

உன் இனிய முத்தங்களை
காத்திருக்க வைக்காதே
உன் உதடுகள் உலர்ந்து போகும்
என் கண்கள் ஈரமாகும்
ஆமாம் கண்ணே
பாதுகாத்து வைத்த முத்தங்களெல்லாம்
வீணடிக்கப்பட்ட முத்தங்கள்

இது
மௌனம் பேசுகின்ற பாஷை.
அளவில்லா சந்தோஷத்தின் ஒரு
முன்னோடி உறுதிமொழி
இளமை இதயங்களின் இனிய முடிச்சு
ஊமை ஒப்பந்தம்
காதலின் முதல் பனிப்பொழிவு

நீயும் நானும் அணைத்தபடி
காதல் கொண்ட நடனமாடும்
இந்த இனிய இரவிற்காக
எத்தனை தவமிருந்தேன்

உன் கைகளை இறுக்கி எடுத்துரைப்பேன்
நீ அறியாத காதலை உனக்கு உணர்த்துவேன்
வா அன்பே வா
அணைப்பும் வெம்மையும் சொல்லட்டும்
பயங்களும் ஐயங்களும் விலகி ஓடட்டும்
நாம் பரிமாறும் இந்த முதல் முத்தத்தில்

உன் கரங்கள் என்னைத் தழுவ‌
நான் உன் மேல் சாய‌
நம் இருவரின் சுவாசம் ஒன்றாக
நான்கு கண்களும் மூட
இதழ் இரண்டும் இணைய‌
மென்மையாக‌ இனிமையாக
மேனியெங்கும் மின்சாரம் தாக்க
உள்ளத்து உணர்வுகள் எங்கோ செல்ல
உன் கள்ளச்சிரிப்பு சொல்லியது
”இது மொத்த குத்தகையின்
ஒரு சிறிய அச்சாரம்” என்று

இனியவளே
காதோரமாக நீ முணுமுணுக்கவில்லை
என் இதயத்தோடு பேசுகிறாய்
உதட்டுக்கு நீ முத்தம் கொடுக்கவில்லை
என் ஆன்மாவோடு கலக்கிறாய்

உப்புத்தண்ணீரைக் குடிப்பது போல் தான்
இந்த முதல் முத்தம்
கொஞ்சம் குடித்தேன்
இன்னும் நிறைய
தாகம் எடுக்கிறது.

ஆனாலும் முதல் முத்தமே
சூரிய ஒளி பனித்துளியைக் குடிப்பது போல்
என் உயிரையே உறிஞ்சிச் சென்று விட்டது.

Thursday, June 2, 2011

பேருந்து பயணம் ,.,,,,,,,

ஜன்னலோர
பஸ் பயணத்தில்..
கழுத்து செயினை
பல்லில் கடித்தபடி..
தினம் பயணிக்கிறாய்..

ஒற்றை
ஜடைப் பின்னலில்..
'இரவை' அள்ளி முடிந்திருக்கிறாய்.!

லேசாய்
முனை உடைந்த
தெற்றுப் பல்லில்
சிறு புன்னகையை..
பூசி வைத்திருக்கிறாய்..

கீழ் இதழின்..
வளைவோரத்தில்..
முற்றுப்புள்ளியை போல்
ஒரு
மச்சப் புள்ளி.

சொல்..
உன்
பெயர்..
'கவிதை' தானே..?