Wednesday, October 28, 2009
முத்தம் தொலைத்த இரவு...
இரவின் இருளில்...
இலக்கின்றி நடந்துக் கொண்டிருந்தேன்.
யாருமற்ற சாலையின்..
வளைந்த பாதையில்..
அவள் நின்று கொண்டிருந்தாள்.
மெல்லிய போர்வையொன்றை..
போர்த்தியபடி..
அவளை இதற்க்கு முன்..
எங்கும் பார்த்ததில்லை.
கடந்து போகையில்..
மெல்லிய புன்னகையோடு..
உடன் நடக்கலாமா என்றாள்.
பதிலேதும் எதிர்பாராமல்...
என்னோடு நடக்க தொடங்கினாள்.
என் கவிதைகளை..
அவளுக்கு தெரியுமென்று...
என் கண்களை பார்த்தாள்.
எங்கு படித்தாய் என்ற
என் கேள்விக்கு
புன்னகையை பதிலளித்தாள்.
மெல்லிய சோகம் படர்ந்த...
என்னுடைய கவிதைகளை
பிடிக்குமென்றாள்.
பிடிக்காத கவிதையென்றும்...
சில தலைப்பை..
பட்டியலிட்டாள்.
மிக தெளிவாய்..
என் கவிதை வரிகளை..
பிழையின்றி வாசித்தாள்.
கேட்டபடியே நடந்திருந்தேன்.
அந்த பனியிரவின் பாதையில்...
வெகுதூரம் கடந்திருந்தோம்.
சில நொடி மௌனம் உடைத்து..
கவிதை ஒன்று
சொல்ல சொன்னாள்...
"எதைப் பற்றி சொல்வது..?"
"இந்த பனி இரவும்..
உடன் வரும் நானும்...
போதவில்லையா உன் கவிதைக்கு.."
கோபமா வருத்தமா தெரியவில்லை...
ஏதோ சொல்ல தொடங்கி...
கவிதையாய் சொல்லி முடித்தேன்.
இரவு...
தொலைய துவங்கியிருந்தது..
"இந்த கவிதைக்கு தலைப்பாய்..
என் பெயர் வைப்பாயா..?"...
ஏனென்றே புரியாமல்..
நானும் தலையசைத்தேன்..
அழுத்தமாய் முத்தமிட்டு..
காதோரம் பெயர் சொன்னாள்..
விடியலின் நிழல் வரும் முன்...
வேகமாய் மறைந்தே போனாள்.
கனவு போலிருந்தாலும்...
கவிதை நினைவிருந்தது.
எழுதி முடித்த போது..
அவள் பெயர்..
மறந்து போயிருந்தது...
முதல் காதல் கடிதம்.....!!!!!
விழியால் இதயம் கவர்ந்தவளுக்கு
எளிதாய் இதயம் இழந்தவன் எழுதுகிறேன்.....
இது வரையில் எழுதி பழக்கமில்லாத
கடிதம் என்பதால் ஒரு வித
பதட்டத்தோடு தொடர்கிறேன்......
பாசம் கொட்டி எழுதுவதால்
பல இடங்களில் வார்த்தைகள் அழிந்திருக்கும்...
அழிந்த வார்த்தையின் பொருள்
நான் சொல்லாமலே உனக்கு புரிந்திருக்கும்...
திசை எங்கிலும் தெரியும் உன் முகத்தை
என்னால் மறக்க முடியவில்லை....
துருவி துருவி... நீ கேட்ட போதும் கூட.....
காதலை என் மனதுக்கு சொல்ல தெரியவில்லை.....
மனதார உன்னை நினைக்கிறேன்...
ஆனாலும் சொல்லாமல்
மனதுக்குள்ளே மறைக்கிறேன்....
கருவை சுமக்கும் தாய் கூட....
பத்து மாதத்தில் இறக்கி வைப்பாள்
அந்த சுகமான சுமையை...!!!!!
காதலை சுமக்கும் இதயம்
காதலியிடம் சொல்ல மறுப்பதால்
நித்தமும் குளமாக்குது இமையை..!!!!
வாச மலர் பறித்து வந்து
நேசம் சொல்லவா..????
இல்லை வான் நிலவை அழைத்து
வந்து தூது சொல்லவா?????
தெரியாமல் புரியாமல்
அலை பாயுது மனம்......
அதனால் தான் காதல் கடிதம் ஒன்று
எழுதுகிறேன் இன்றைய தினம்.....
எனக்காக ஆரமித்து... உனக்காக எழுதி.....
நமக்காக முடித்து......
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.....
நீ வரும் பாதையில் காதலை சொல்ல..!!!!!
Friday, October 9, 2009
உன்னிடம் சொல்லிவிட்டேன்
உன்னிடம் சொல்லிவிட்டேன்
என்ற எண்ணத்தில்
நான் இருப்பதை விட..
நீ என்னை இன்னும் ஏற்றுகொள்ளவில்லை
என்கின்ற துக்கத்திலேயே
என் இதயம் இறந்துபோகிறது
தினமும்..
வாழ்வின் சுவையை
உன்னில் அறிய முயன்றேன்
இன்று...
கண்ணீரின் சுவையை
அறிந்துகொண்டேன்..
காதலும் கடலும்
ஒன்று தான்.
கடலில் முழ்கி
முத்தெடுப்பது போல
தான் காதலும்.
உன்கண்கள் கண்டேன்
என் இதயம் தொலைத்தேன்...
உன்கைகள்
என்கன்னம் தழுவிய
போது அன்பை உணர்ந்தேன்..
நீ என் அருகில் இருக்கும்
போதெல்லாம் என் நெஞ்சில்
சாரலை.. இருந்தாய்
இன்று தூரமாய் சென்றுவிடவே
என் நெஞ்சம் பாரமாய் அவதேனடி..
உன் காதுமடலை
கலைவடித்த அந்த பிரமனுக்கு
எப்படி நன்றி சொல்லுவேன்..
உன் செவ்விதழின் சிவந்த
நிறத்தை பார்த்து
ரோஜா கூட தவம்
கிடக்கும்.
தன் இதழில் வண்ணம் சேர்க்க.
உன்னருகில் நின்றபோது
இடமாறதுடிக்கும்
என் இதயம்
கரை தீண்டும் அலை
போல
உன் இதயத்தை வந்து வந்து
செல்கிறதே!
என் கன்னத்தை
உன் இதழால் ஈரமாக்குவாய்
என்று நான் கனவு கண்டபோது
ஈரத்தை உணர்ந்தேன்
உன் முத்தத்தால் அல்ல
என் கண்கள் விட்ட கண்ணீரால்
உன் பக்கத்தில் நிற்க்கவே
வெகுநேரம் நின்றேன்
வெகுநேரம் நின்றும்
உன் மௌனம் மலராத மொட்டகவே
இருந்தன.. உன் இதழ் பார்த்தே
என் பூக்கள் எல்லாம் வாடிபோனதடி..
பூக்களை கூட நேசிக்காதவன்
உன்னை பார்த்தும்
நேசிக்க தொடங்கினேன்........
பூக்களின் மென்மையை அறியாதவன்
உன்மனதின் மென்மையை அறிந்தேன்..
விழிகூட கேட்கிறது கண்ணீர்
வரும் நேரங்களில்
உன் மடிவேண்டுமென்று,,,,,,,,,,,
என் விழிமூடுமுன் வந்துவிடு
உன்முகத்தை பார்த்தேன்
விடைபெறுகிறேன்..
உன்னை விட்டு அல்ல
இந்த மண்ணை விட்டு......
Thursday, October 8, 2009
மரித்தகாதல் மரித்ததாயிருகட்டும்....
விழிகள் வழியாக இதயத்தில்
போர் தொடுத்து
என் காதல் சாம்ராஜ்யத்தின்
சிம்மாசனத்தை வீழ்த்தியவளுக்கு...
இந்த உலகத்தில்
என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்தான்
என்னை தினம் தினம் கொல்லவும் செய்கின்றன...
என் மூச்சு ஒரு நாள்
அதன் முகவரி தேடி வரும்
அப்போதாவது திறந்து வை
உன் இதயத்தின் கதவுகளை..
உன்னோடு பார்க்கவேண்டிய உலக
அதிசயங்கள் எல்லாமே எங்கே என்
அதிசயம் என்று கேக்கிறது அதற்கு
எப்படித் தெரியும் உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது...............
உன் நட்புக்காக இதயத்தில்
இடம் கொடுக்க பலர் உன்டு.....
உன் நட்புக்காக இதயம்...
கொடுக்க நர்ன் மட்டும் உன்டு.......
சாகடிக்கபடலாம் .... ஆனால் நான் தோற்க்கடிக்க படமாட்டேன்
காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது!!!!
என் கல்லறை வரும் வழியெங்கும்
முட்களை தூவுங்கள்....
ஒருவேளை அவளின் கண்ணீர்பட்டு
என் காதல் உயிர்த்தெழலாம்
எனக்கு விருப்பமில்லை
மீண்டும் இறந்துவிட...
மரித்தகாதல் மரித்ததாயிருகட்டும்....
Subscribe to:
Posts (Atom)