Thursday, December 11, 2008

காதலில் கவிதையில்லை...


உன் கவிதை வரிகளால் கட்டிப்போட்டாய்
நான் மயங்கிக்கிடந்த ஓர் வேளையில்
நீ காதலைச் சொன்னாய்-
நான் சிறு பறவையாய் தலையசைத்தேன்...

நீ கொஞ்சம் கொஞ்சமாய்
உன் கவிதைகளிலிருந்து மாறுபட்டாய்
உன் பொய்முகம் ரசிக்கமுடியவில்லை
காதலிலிருந்தும் வெளிவரமுடியவில்லை
அதுவும் தேவைப்பட்டது-
நீ சந்தர்ப்பங்களுக்காய் காத்திருந்தாய்..
நான் பருந்திடமிருந்து தப்பிக்கும் ஓர்
சிறுகுஞ்சாய்....

ஓர் எச்சரிக்கை உணர்வோடே நாம்
பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்
ஆது- தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஒத்திருந்து
நீ நேர்த்தியாய் அதைச்செய்தாய்..
நான் பலமுறைதோர்க்க ஆரம்பித்தேன்..

நான் எதி்ர்பார்த்ததைப்போல
என் பலவீனம் உன் பலமாய்
நீ என்னிலிருந்து விலகிப்போனாய்
நான் துடுப்பிழந்த படகானேன்

வெகு நாள் கழித்து
திடீரென ஓர் கவிதை
பாலையின் கொடும்மணல் சூட்டில் வந்துவிழுந்த
மழைத்துளியாய்- அங்குமீண்டும் ஓர்
கள்ளிச்செடி துளிர்க்காரம்பித்தது....

காதல் எல்லையில்லா பிரபஞ்சம்
கவிதை காதலிலிருந்ததது
காதல் கவிதையில்லை...

No comments: