Tuesday, December 30, 2008
காதலின் கடைசிக்குறிப்பு..........
இறக்கை கோதிக்கொண்டிருக்கும்
ஓர் வெண்புறாவின் மென்மையென
தடவிப்போகிறாய்- உரசிப்போகும்
குளி்ர்காற்றென உணர்கிறேன் நான்
கூடிக்களித்திருக்கும்
ஓர் குடும்பவிழாவில்- நீ
ரகசியக்குறிப்புகளை வீசிப்போகிறாய்
நான் அவஸ்தையாய் சமாளிக்கிறேன்..
பெரும்மழையின் வேகத்துளிகளாய்
எனக்குள் புகுகிறாய்
சிறு குழந்தையின் புன்சிரிப்பை
ஓவியமாக்க முயற்சிக்கிறாள் தாய்
உலகின் கடைசி காதல் குறிப்பை
எழுதிக்கொண்டிருக்கிறான்-ஓர்
விரல்களிழந்த காதலன்
தீவிரவாதிகளால் சுடப்பட்ட
காதலியின் இரத்தத்தை மையமாக்கி.....
அமைதியாய் விடிகிறது காலை
இன்னுமொரு காதலை பூத்து...
கருத்துப்பிழை சுமந்து வெளிவரும்
அக்காதலின் கடைசிக்குறிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கவிதை நல்லாயிருக்குங்க
//கருத்துப்பிழை சுமந்து வெளிவரும்
அக்காதலின் கடைசிக்குறிப்பு//
சொல்ல முடியாத வேதனைக்குறிப்புகள் சுமந்த வார்த்தைகள்..!!!
Post a Comment