
இடை விடாது நீ பேசும்
வார்த்தையின் வரிசையிலா..?
இல்லை வார்த்தைகள்
ஓய்வெடுக்கும் இடைவெளியில்
வந்து போகும் அந்த மெல்லிய புன்னகையிலா..?
இதயம் களவாடும் வித்தைக் கற்ற
உன் கண்களிலா..??
இல்லை என்னை கவி எழுத
வைக்கும் உன் காதலிலா..??
இதுவரையில் தென்றல் மட்டுமே..
தீண்டி சுகம் பெற்ற.....
உன் கட்டழகு மேனியிலா..??
இல்லை புன்னகையோடு வார்த்தை
கலந்து பேசும் உன் புதுமையான பேச்சிலா..??
இல்லை எங்கோ வரும் என்னை இருந்த
இடத்திலிருந்தே தாக்கும் உன் கண்களின் வீச்சிலா..??
பருவம் சுமந்து வரும் உன் பேரழகிலா..??
பாவை உன் பாதம் நடந்த திருவீதியிலா..??
எங்கடி விழுந்திருக்கும் என் இதயம்
தெரியாமல் விடியல் காண மறுக்குது என் உதயம்..!!!
கண்டெடுத்தால் தந்து விடு...!!!
இல்லையேல் அதற்கும் சேர்த்து
நீயே காதல் பாடம் கற்று கொடு..!!!!
No comments:
Post a Comment