
மல்லி மலரடி தொட்டு
மலர்கொள்ளும் கார்கூந்தல்வரை...
பிரம்மன் தன் கலைத்திறமையை
பிரமிப்புடன் வெளிக்கொணர்ந்தமையால்
படைக்கப்பெற்ற சிறந்த ஓவியம் நீ..
இதழ்கள் பேசத் துடிக்குமுன்
விழிகளே பேசி முடிக்கின்றமையால்
மௌனபாசையில் மட்டுமே!
தவமிக்கின்றன ஒவ்வொரு வினாடியும் ....
கணைதொடுக்கும் காமனையும் களிப்படையச்செய்யும்
விழிகள் உனக்கு!
விழிகள் வழியே மொழிகள் நடைபயில்வதை
உன்னிலிருந்து மட்டுமே காணமுடிகிறது...
பிரம்மன் உலகுக்குச் செய்த மிகப்பெரிய தவறு
உன்னை படைத்தத்து....
அதனால்தான் என்னவோ - உலகமே பாவத்தில்...
வண்டுகளுக்குள் ஒரு தீர்மானமாம்!
நீ மட்டும்- உன்
உதடுகள்மேல் அமரச்சிறிது இடமளிப்பதாக இருந்தால்!!!
எந்தப்பூவையும் தீண்டுவதில்லையென்று...
மொத்தத்தில்...
தவணைமுறையில் உயிர்குடிக்கும்,
ஓர் அழகிய ராட்சஸி!!!
என் தேவேதை நீ !
1 comment:
அருமையா இருக்கு - சொல்லால் சிலை வடிக்கிறீங்க.
Post a Comment